யாழ்ப்பாண பல்கலைக்கழக சைவமாநாட்டின் இறுதிநாள் நிகழ்வுகள்(காணொளி)

31 0

சைவசித்தாந்த மேன்மைகளும், இலங்கையரின் பங்களிப்பும் எனும் தொனிப்பொருளில் நடைபெற்றுவரும் சைவமாநாட்டின் இறுதிநாள் நிகழ்வு தகைசார் பேராசிரியர் ப.கோபாலகிருஸ்ணஐயர் தலைமையில் ஆரம்பமாகியது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியர் சி.பத்மநாதன், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சைவசித்தாந்தத்துறை பேராசிரியர் முனைவர் எஸ்.பி.சபாரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்வின் சிறப்புரைஞர்களாக பேருர் ஆதீனத்தின் வணக்கத்திற்குரிய சீர்வளர்சீர் மருதாசல அடிகளார், திருவாடுதுறை ஆதீனத்தின் சைவசித்தாந்ததுறை பேராசிரியர் வீ.ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.