பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீவிரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில் இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, சுமார் 50 ஆயிரம் காவல்துறையினர் மற்றும் 7 ஆயிரம் இராணுவத்தினரும் பல்வேறு காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுத்தப்பட்டுள்ளனர்.
இந்த முறை ஜனாதிபதி தேர்தலின் பொருட்டு 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் அதிக வாக்குகளை பெற்று முதல் இரண்டு இடங்களை பெறுபவர்கள், இரண்டு வாரங்களில் இடம்பெறும் இரண்டாவது சுற்று ஜனாதிபதி தேர்விற்கு தகுதி பெறுவர்.
ஐரோப்பியவில் தோன்றியுள்ள அகதிகள் தொடர்பான பிரச்சினையே இந்த முறை பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் முக்கிய கருபொருளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

