அரச நிறுவனங்களின் செயல்திறன் குறித்த புதிய ஆய்வறிக்கை வௌியானது

212 0

செயல்திறன் வீழ்ச்சியடைந்துள்ள அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் சம்பந்தமாக அரச தொழிற்சங்கச சம்மேளனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

அந்த ஆய்வின்படி அரச நிறுவனங்களுக்குள் செயலாற்றல் நூற்றுக்கு 74 வீதமாக குறைவடைந்துள்ளதென்று சம்மேளனத்தின் செயலாளர் அஜித் கே. திலகரட்ன கூறினார்.

நாட்டின் அரச நிறுவனங்கள் சம்பந்தமாக நூற்றுக்கு 21 வீதமான அளவே திருப்தியடைய முடியும் என்று அந்த ஆய்வின் முலம் தெரிய வந்துள்ளது.

அரச நிறுவனங்களில் நூற்றுக்கு 05 வீதமானவை குறிப்பிடத்தக்க அளவு திருப்தியடையும் வகையில் இருப்பதாக அஜித் கே. திலகரட்ன கூறினார்.

அரச தொழிற்சங்கச சம்மேளனத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.