தன்னை யுத்த குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும் – மஹிந்த அச்சம்

295 0

யுத்திற்கு ஆணை வழங்கிய தமக்கு தண்டனை வழங்கக் கூடிய சட்ட மூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ரெஜி ரணத்துங்கவின் 80வது ஜனனதின நிகழ்வு நேற்று கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்றது.

அந்த நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ இதனைத் குறிப்பிட்டார்.

தீவிரவாதிகளின் பிடியில் இருந்த தாய் நாட்டை மீட்க, யுத்தத்திற்கு ஆணை வழங்கிய தாம் உள்ளிட்ட உள்ளிட்ட இராணுவத்தினருக்கு தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

30 வருட யுத்தத்தை நிறைவு செய்தவர்களுக்கு இந்த புதிய சட்ட மூலம் கொண்டுவரப்படவுள்ளது.

இதன் மூலம் சர்வதேச நாடுகளோ, அந்த நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளே எந்த நாட்டிலும் வழக்கு தொடுக்க முடியும்.

அதன் மூலம் எவரையும், ஏன் தன்னையும் அழைக்க முடியும்.

இந்த நிலையில் குறித்த நாடுகள் ரோம் சாசனத்தில் கைச்சாத்திட்டிருக்குமானால் அந்த நாட்டுக்கு தன்னை யுத்த குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.