தான் சார்ந்திருக்கின்ற மதத்தின் மீது அதிக பற்றும் ஏனைய மதங்கள் தொடர்பாக போதிய அறிவும் இல்லாத காரணத்தினாலேயே மதப்பிரச்சனைகள் ஏற்படுகிறது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மானிப்பாய் சத்ய சாய் பாடசாலையில் நடைபெற்ற சர்வமத விழாவில் உரையாற்றும் போது இ;வ்வாறு குறிப்பிட்டார்.
நாம் பிறக்கும் போது மனிதர்களாகவே பிறக்கின்றோம் மதம், மொழி ஆகியன நாம் பிறந்த பின்பு எமக்கு புகட்டப்படுகின்றன அவ்வாறு புகட்டப்படுவன எம்மைச் சார்ந்தவை அல்ல என்றும் குறிப்பிட்டார்.
மானிப்பாய் சத்ய சாய் பாடசாலையின் பணிப்பாளர் இ.வசந்தசேனன் தலைமையில் நடைபெற்ற சர்வமத விழாவிற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் றெயினோல்ட் கூரே சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் கௌரவ வருந்தினராக சத்தியசாயி சேவா உலக நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் பி.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கருத்துரைகளை யாழ்ப்பாண நாகவிகாரை சர்வதேச பௌத்த நிலையத்தின் ஸ்ரீவிமல தேரர், கிளிநொச்சி மாவட்டத்தின் உலக மகாசபையைச் சேர்ந்த ஏ.எம்.ஏ.காசினி, சத்ய சாய் உலக நிறுவனத்தின் கல்வி மேம்பாட்டைச் சேர்ந்த எம்.புவனேந்திரன் ஆகியோர் வழங்கினர்.
கலை நிகழ்வாக கலாநிதி கிரிசாந்தி ரவீந்திராவின் நெறியாள்கையில் நாட்டிய நாடகமும், தனிநடனமும் இடம்பெற்றன.

