கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 53 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
இறுதி யுத்தம் நிறைவடைந்து மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதும் கேப்பாபுலவு மக்கள் மாதிரிக் கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.
தம்மை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம், கவனயீர்ப்பு போராட்டங்களை கடந்த ஏழு வருடங்களாக முன்னெடுத்து வந்தபோதும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு மக்களின் போராட்டங்கள் நிறுத்தபட்டன.
இந் நிலையில் பொதுமக்கள் தமது சொந்த காணிக்குள் கால் பதிக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து, தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை கேப்பாபுலவு இராணுவ முகாமிற்கு முன்பாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று 53 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை, வட மாகான சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

