கிளிநொச்சி குளத்தை விட வாய்க்கால் ஆழமாக உள்ளதால் முழு நீரும் வெளியேறும் நிலை…………(காணொளி)

303 0

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள குளத்தின் நீர் வெளியேறும் வாய்க்கால் ஆழமாகவும், குளம் உயரமாகவும் உள்ளதால் துருசு திறக்கப்படுகின்ற போது முழுநீரும் வெளியேறு அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குளத்தில் மணல் மற்றும் மண் படிமங்களை அகற்றி மூன்று அடியாக ஆழப்படுத்துமாறு இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
கிளிநொச்சி குளம் இரணைமடு நீரை உள்வாங்கி வெளியனுப்பும் குளமாகவும், கனகாம்பிகை குளத்தின் வான் நீரையும், ஏனைய பிரதேசத்து மழை நீரையும் உள்ளீர்த்து வெளியனுப்பும் குளமாகவும் காணப்படுகிறது.
கூடுதல் காலத்திற்கு நீரை பெறும் குளமாக விளங்குகின்றபோதும், குளத்தின் துருசினை திறந்து விட்டால் முழு நீரும் வெளியேறும் நிலைமை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.