மைத்திரிபால சிறிசேனவுக்கு தனியார் காணிகளை விடுவிப்போம் என்ற உறுதி மொழியின் என்ற அடிப்படையில் ஆதரவு வழங்கினோம்- சுமந்திரன் எம் பி

240 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக இருந்த போது “தனியார் காணிகள் அனைத்தையும் விடுவிப்பதாக எழுத்து மூலம் எமக்கு வாக்குறுதி அளித்ததன் காரணமாக தான் நாம் புதிய அரசுடன் இணங்கிக்கொண்டோம் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அதனடிப்படையிலேயே இவ்வாறான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

யாழ் குடாநாட்டில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் மற்றும் அரச காணிகளை விடுவித்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் யாழ் மாவட்ட அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த காலத்தில் யாழ் மாவட்டத்தில் 27 ஆயிரம் ஏக்கர் நிலம் தம் வசம் இருந்தாகவும் தற்போது 4 ஆயிரத்து 700 ஏக்கர் காணிகளாக குறைக்கப்பட்டுள்ளது எனவும் இக் கலந்துiராயாடலின் போது இராணுவத்தினர் தெரிவித்துள்ளார்கள். குறித்த காணிக்குள் பலாலி விமானத்தளமும் அடங்கியுள்ளது.
வலி வடக்கு பிரதேசத்தை சூழ்ந்த பகுதியில் 12 ஆயிரம் ஏக்கர் பொதுமக்களின் நிலம் ஆரம்பத்தில் படையினர் வசம் இருந்தது. 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாவை சேனாதிராஜா உட்பட 3 போர் வழங்கு தாக்கல் செய்த போது, ஒருவர் இறந்து விட்டாhர் மற்றையவருடைய காணி முற்று முழுதாக விடுவிக்கப்பட்டது. ஆனால் சேனாதிராஜாவின் வழக்கு தற்போதும் நடந்து கொண்டு இருக்கிறது. அதில் படிப்படியாக சில இடம் விடுவிக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றில் இவை அனைத்தும் மக்களின் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட வேண்டும் என இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டது. மக்களின் மீள் குடியேற்றத்துக்காக அதற்கான படிமுறை வகுத்திருந்தும் 10 வருடங்கள் கடந்திருந்தும் விடுவிக்காமல் உள்ளார்கள் என்பது எமது கருத்து.மீள் குடியேற்றம் அதாவது சுமூகநிலை வரும் போது மக்கள் மீண்டும் தமது சொந்தக் காணிகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது எமது ஒரே ஒரு அடிப்படை கோரிக்கையாக இருந்தது.
ஜனாதிபதி தேர்தலின் போது புதிய அரசுடன் நாம் இணங்கி கொண்டதற்கான காரணம் என்னவெனில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக இருந்த போது தனியார் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என்ற வாக்குறுதியை எழுத்துமூலம் எமக்கு கொடுத்திருந்தார். அதன் அடிப்படையிலே தான் அவரின் பணிப்புரைக்கமை இந்த காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்களை நடாத்திக்கொண்டு இருக்கிறோம்

எந்த அளவுக்கு படைத்தரப்பினர் இணங்கி தனியார் காணிகளை விடுவித்து, தமது இடங்களை மாற்றி அமைத்து உண்மையாகவே பாதுகாப்புக்கு தேவையான இடங்களுக்கு செல்கிறார்கள் எனவும் என அவதானிப்போம்.
அதன் பின்னரும் கூடுதலான நிலப்பரப்புக்கள் படை தரப்பிடம் இருக்குமாக இருந்தால் அடுத்த நடவடிக்கை பற்றி சிந்திக்க முடியும்.
தகவல் பெறும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த 3 கலந்துரையாடல்களும் பயனுள்ளதாக இருந்தன.இந்த மாவட்ட ரீதியான கூட்டங்களுக்கு பின்னர் நடைபெறுவுள்ள அரசியல் தலைவர்களுடனான உயர்மட்ட கலந்துரையாடல் தான் மிக முக்கியமானதாக இருக்கும் இது தான் காணி தொடர்பில் அரசை முடிவு எடுக்க செய்யும் கலந்துரையாடலாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.