வடக்கில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை அருகி வருகின்றது – சிறுவர் நன்னடத்தை அதிகாரி

318 0
வடக்கில் கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை அருகி வருவதால் பாலகர் பகற்பராமரிப்பு நிலையங்களை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என தெரிவித்த நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள வடமாகாண  ஆணையாளர் ரி.விஷ்பரூபன், அங்கு பாலகர்களின் உச்ச நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் வடமாகாணத்தில் பாலகர் பகற்பராமரிப்பு நிலையங்கள் தற்போது அவசியமாகும். வடக்கில் அதிகமான பெண்கள் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுவதால்,  முன்னைய கால கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை தற்போது குறைவடைந்து வருகிறது. எனவே பிள்ளைகளை பராமரிப்பதற்கு பராமரிப்பு நிலையங்களின்  தேவை அவசியமாகிறது.
சாதாரண  சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கையும் அதற்கான காரணத்தையும் ஆராயும் போது  தாய் தந்தையர்கள் வேலைக்கு போவதால்  பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை என்ற காரணத்தினால் தான் சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்படுகிறர்கள் என அவதானிக்க முடிகிறது.
சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களின் வளற்சிகளை ஆராயும் போதும் சாதாரண குடும்பத்தில் இருந்து வளரும் பிள்ளைகளுக்கு இடையில் பல வேறுபாடுகள் காணப்படுகிறது என பல ஆராட்சிகளில் இருந்து தெரிய வருகிறது. எனவே குடும்பம் என்பது சிறந்;த அலகாக காணப்படுகிறது.
பகல் பராமரிப்பு நிலையங்கள் இல்லாத காரணத்தால் சிறுவர்கள் சிறுவர் இல்லங்களில்  சேர்க்கப்டுகிறர்கள். பகல் பராமரிப்பு நிலையங்கள் சிறப்பான முறையில்  இருந்தலால் பிள்ளைகள் குடும்பத்துடன் வாழும் சூழ்நிலையை  ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.
குறித்த பாலகர் பகற்பராமரிப்பு நிலையங்கள் தொடர்பில் மாகாண சபையால் அண்மையில் கடந்த வருடம் நியதிச்ச சட்டம் கொண்டுவரப்பட்டது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. அதில் எமது திணைக்களத்துக்கு பல அதிகாரங்கள் கிடைத்துள்ளன.
எனவே குறித்த வியடம் தொடர்பில்  பாலகர் பகற்பராமரிப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தி வருகிறோம்.
இந்த நிலையங்கள் வியாபார நோக்குடன் இயங்கலாம். ஆனால்  பாலகர்களின் உச்ச நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் திணைக்களம் அதை அவதானிக்கும். இந்த நிலையங்களில் ஒரு வயது தொடக்கம் 5 வயதுக்குட்பட்ட பிள்ளை சேர்க்கலாம். சேர்கும் போது அந்தந்த  பிரதேச நன்னடத்தை உத்தியோகத்தர், சுகாதார வைத்திய அதிகாரி, மருத்துவ தாதி ஆகியோரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
வடமாகாணத்தில் தற்போது பாலகர் பராமரிப்பு நிலையங்கள் 25 இயங்கி வருவதாக  தெரிய வருகிறது அதில்  15 பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல நிலையங்களில் அடிப்படை வசதிகள் பல இல்லை அதை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
எமது திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்படும்  பராமரிப்பு நிலையங்களுக்கு  எதிர்காலத்தில் சகல உதவிகளும் வழங்கப்படும். சட்டரீதியாக இயங்க வேண்டும் என்றால் பதிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 ஒரு வாரத்தில் பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.பராமரிப்பு நிலையங்களை வைத்துள்ளவர்கள்  உடனடியாக பதிவை மேற்கொள்ள வேணடும். அத்துடன் அதை நடாத்துபவர்கள் நற்பிரஜைகள் உன்பதை உறுதிபடுத்த வேண்டியது மிக முக்கியம். இந்த நிலையங்கள் பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதுடன் அது ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்படும். எனவே எமது திணைக்களத்துடன் முரண்பாடுகள் எவையும் இன்றி எம்முடன் ஒத்துழைத்து சிறப்புடன் பகற்பராமரிப்பு நிலையங்களை நடாத்த முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.