எதிர்ப்பு பேரணியை நடத்தவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்

382 0

611945022Untitled-1மாலபே தனியார் கல்­லூ­ரியை பகு­தி­ய­ளவில் அரச உட­மை­யாக்­கு­வ­தற்கு நாம் ஒரு­போதும் உடன்­படப் போவ­தில்லை. மேலும் குறித்த பல்­க­லைக்­க­ழ­கத்தின் செயற்பா­டு­களால் அரச பல்­க­லை­க­ழக மாண­வர் கள் எதிர்நோக்கும் பிரச்­சி­னை­களை வலி­யு­றுத்தி இன்­றைய தினம் நுகே­கொ­டையில் எதிர்ப்பு பேர­ணியை நடத்­த­வுள்ளோம் என்று அனைத்து பல்­க­லை­க்க­ழக மாணவர் ஒன்­றி­யத்தின் இணைப்­பாளர் லஹிரு வீர­சே­கர தெரி­வித்தார்.

மரு­தா­னையில் அமைந்­துள்ள சன­ச­மூக கேந்­திர நிலை­யத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,மாலபே தனியார் பல்­க­லைக்­க­ழ­க­மா­னது ஆரம்­பத்தில் போதனா வைத்­தி­ய­சா­லை­யாக இயங்கும் என தெரி­வித்தே ஆரம்­பிக்­கப்­பட்­டது. எனினும் பிற்­கா­லத்தில் இல­வச கல்­வியை விற்­ப­னை­ செய்யும் நிலை­ய­மா­கவே இதன் செயற்­பா­டுகள் அமைந்­த­தோடு போதனா வைத்­தி­ய­சா­லை­யா­கவும் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை.

தற்­போது குறித்த தனியார் பல்­க­லைக்­க­ழ­கத்­தினை பகு­தி­ய­ளவில் அரச உட­மை­யாக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இவ்­வாறு குறித்த தனியார் பல்­க­லைக்­க­ழ­கத்தை அரச உட­மை­யாக்­கு­வ­தற்கு முன்னர் அதில் இடம்­பெற்ற மோசடி குறித்து முறை­யான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும்.

மேலும் இவ்­வா­றான தவ­றான திட்­டங்கள் மூலம் எதிர்­கா­லத்தில் மக்­க­ளுக்­கான சுகா­தார சேவையின் பாது­காப்­பினை அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்த தவ­றி­யுள்­ளது. இச்­செ­யற்­பா­டு­களை கண்­டித்து இன்­றைய தினம் (புதன்­கி­ழமை) நுகே­கொ­டையில் எதிர்ப்பு பேரணியையொன்றை நடத்தவுள்ளோம்.

இப்பேரணியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகள்,ஆசிரியர் சங்கம் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர் என்றார்.