கொழும்பின் சில பாகங்களில் நீர்விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

338 0

கொழும்பின் சில பாகங்களில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணிவரை 24 மணிநேரத்திற்கு நீர்விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை அறிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை, கொள்ளுப்பிட்டி, பம்பலபிட்டி, பொரளை மற்றும் மருதானை ஆகிய பிரதேசங்களுக்கே நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இடம்பெற உள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.