மாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பறிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் தீர்மானம்

332 0

மாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பறிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர்கள் அனைவரும் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைத் தெரிவித்துள்ளார்.

மீதொட்டுமுல்லை குப்பை மேடு சரிவு தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றது.

இந்த நிலையில், மாகாண சபையின் அதிகாரங்களை பறிக்க முயற்சிப்பது எந்த வகையில் நியாயமானது என கிழக்கு மாகாண முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாகாண அரசின் அதிகாரத்தைப் பறித்தெடுக்கும் மத்திய அரசின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 25ஆம் திகதி மாகாண சபையில் பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.