உலக அளவில் மிக உயரமான ஆண்களில் நெதர்லாந்தும், பெண்களில் லாத்வியாவும்

336 0

201607271152251203_Tallest-People-In-The-World-Live-In-Or-Near-The-Netherlands_SECVPFஉலக அளவில் மிக உயரமான ஆண்கள் பட்டியலில் நெதர்லாந்தும், பெண்களில் லாத்வியாவும் முதல் இடத்தை பிடித்தன.லண்டன் இம்பீரியில் கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானிகள் உலகில் உயரமான மற்றும் குள்ளமான ஆண், பெண் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் சத்துணவு, சுற்றுச்சூழல், மரபணு தன்மைகள் முக்கிய பங்கு வகித்தன.குழந்தைகள் மற்றும் ‘டீன்’ வயதினர்கள் சிறந்த சத்துணவுடனும், நல்ல சுற்றுச்சூழலிலும் வளரும் போது அவர்கள் மிகவும் உயரமானவர்களாக வளர்கின்றனர். மேலும் கர்ப்பகாலத்தில் நல்ல ஆரோக்கியமான சத்துள்ள, திடமான உணவு கிடைக்கும் கருக்குழந்தைகள் பிறந்து பெரியவர்கள் ஆனதும் மிக உயரமானவர்களாகின்றனர்.

அந்த வகையில் நெதர்லாந்தை சேர்ந்த ஆண்கள் உலகிலேயே மிக உயரமானவர்களாக உள்ளனர். அவர்கள் சராசரியாக 183 செ.மீட்டர் உயரம் அதாவது 6 அடி உயரம் கொண்டவர்களாக உள்ளனர்.

பெண்களில் லாத்வியா நாட்டினர் மிக உயரமானவர்களாக இருக்கின்றனர். அவர்கள் 170 செ.மீட்டர் அதாவது 5 அடி 7 அங்குலம் வரை வளர்ந்துள்ளனர்.

கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கர்கள் அதிக உயரம் உள்ளவர்களாக ஆண்கள் 3-வது இடத்திலும், பெண்கள் 4-வது இடத்திலும் இருந்தனர். 2014-ம் ஆண்டில் ஆண்கள் 37-வது இடத்திலும், பெண்கள் 42-வது இடத்திலும் உள்ளனர்.

ஸ்பெயின், இத்தாலி, லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஆண் மற்றும் பெண்கள் உயரமானவர்களாக உள்ளனர். அதே நேரத்தில் சகாரா ஆப்பிரிக்கா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மக்களின் உயரம் 30 மற்றும் 40 ஆண்டுகளில் குறைந்துள்ளது என்றும் ஆய்வு தெரிவித்துள்ளது.

உயரம் அதிகமானவர்கள் அதிக நாட்கள் உயிர்வாழ்கின்றனர். சிறப்பாக கல்வி கற்று அதிக பணம் சம்பாதிக்கின்றனர். அதே நேரத்தில் சில உடல்நலக் குறைபாடுகள் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.