கிளிநொச்சியில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களின் காணி விடுவிப்பு தொடர்பான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல் (காணொளி)

247 0

கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், சி.சிறிதரன் மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் சாமந்தி வீரசிங்க மற்றும் படையினர் ஆகியோர் நேற்றைய கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

ஊடகவியலாளர்கள் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் சில நிமிடங்கள் மாத்திரமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.