நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலி(காணொளி)

250 0

ஹப்புத்தளை நுவரெலியா பிரதான வீதியில்இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹப்புத்தளை நுவரெலியா பிரதான வீதியின், வங்கிய கும்புரகந்தே புஹ_ல்பொல சந்தியில்இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் 26 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொரலாந்தை நகரிலிருந்து கெப்பெடிபொல நோக்கி பயணித்த மோட்டர் சைக்கிள் வங்கியகும்புர சந்தியில் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.