கொழும்பு மீதொட்டமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்கான நிகழ்வும் அஞ்சலி நிகழ்வும் வவுனியாவில் நடைபெற்றது.
தமிழ் விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள புளியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
மீதொட்டமுல்ல குப்பைமேட்டு அனர்த்தத்தில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் முகமாக புளியடி பிள்ளையார் ஆலயத்தின் முற்றலில் வவுனியா அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், கலாசார உத்தியோகத்தர்கள், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், பிரமாணர்கள் ஒன்றியம், வவுனியா இந்து கிறிஸ்தவ முஸ்லிம் சர்வ வன்னி மாவட்ட மக்கள் உட்பட அனைவரும் ஓம குண்டம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
அத்துடன் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக விசேட பூஜை வழிபாடுகளும், தீப அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

