மாலபே கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பொலனறுவை மாவட்ட வைத்தியர்கள் போராட்டம்

309 0

மாலபே வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொலனறுவை மாவட்ட வைத்தியர்கள் இன்றும் போராட்டம் நடத்தவுள்ளனர்.

அந்த சங்கத்தின் இணை செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று காலை எட்டு மணி முதல் இந்த சேவைப் புறக்கணிப்பு போராட்டம் இடம்பெறுகிறது.

குறித்த கல்லூரிக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் மாவட்ட ரீதியாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.