இரு அணிகளை இணைக்க குழு அமைப்பு

236 0

இரு அணிகளை இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைக்கப்பட்டிருப்பதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா அணியினர் தெரிவித்துள்ளனர்.

தங்கள் தரப்பில் எந்த நிபந்தனையும் இல்லை என்றும் அம்மா அணியினர் தெரிவித்துள்ளனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரு அணிகளும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாகவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தங்கள் நிபந்தனைகளில் விடாப்பிடியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணை மற்றும் தினகரன், சசிகலா மற்றும் அவர்களின் குடும்பத்தினரை முழுமையாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ஓ.பி.எஸ் கூறுகின்றனர்.

இந்நிலையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம் தலைமையிலான குழுவினர்,நேற்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

அணிகளை இணைப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வந்தால் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளோம் என்று அம்மா அணியினர் தெரிவித்துள்ளனர்.