கல்குடா பகுதியில், தாக்குதலுக்குள்ளான இரண்டு ஊடகவியலாளர்களும், மீண்டும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு (காணொளி)

264 0

மட்டக்களப்பு கல்குடா பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற போது தாக்குதலுக்குள்ளான இரண்டு ஊடகவியலாளர்களும், மீண்டும் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

கல்குடாவில் அமைக்கப்பட்டுவரும் மதுபான உற்பத்திச்சாலை தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற போது இரண்டு ஊடகவியலாளர்கள்   தாக்கப்பட்டமை தொடர்பில், பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்தனர்.

பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையினை தொடர்ந்து இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர்களால் செய்யப்பட முறைபாடுகள் தொடர்பில் பொலிசாரால் உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவினால் பொலிசாருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கைக்கும், பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பக்கச் சர்பாக அமைந்துள்ளன. போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, மீண்டும் மனித உரிமை ஆணைக்குழுவில், ஊடகவியலாளர்கள் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.