பாடசாலை மாணவன் மாயம் ; தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

169 0

கண்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக மாணவனின் தாயார் நேற்று திங்கட்கிழமை (12) கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

கட்டுகஸ்தோட்டை ரணவன பகுதியை சேர்ந்த மாணவணொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இந்த மாணவன் நேற்று திங்கட்கிழமை (12) பாடசாலை செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றதாகவும் அதன் பின்னர்  மாணவனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் மாணவனின் தாயார் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.