கொட்டுகொட பிரதேசத்தில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட கசிப்புடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு மதுவரி நிலைய அதிகாரிகள் மற்றும் கம்பஹா மதுவரி நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட 540,000 மில்லி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த கசிப்பு தொகையானது கொட்டுகொட, மினுவாங்கொடை மற்றும் கட்டுநாயக்க ஆகிய பிரதேசங்களுக்கு விற்பனை செய்ய தயாராக இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.



