ஜெயிக்கா நிறுவன நிதியில் வடக்கில் 3 ஆயிரத்து 10 மில்லியனில் வேலைத்திட்டம் -அ.பத்திநாதன்

305 0
வடமாகாணத்தில்   மேற்கொள்ளப்படவுள்ள கிராமிய கட்டுமான அபிவிருத்தி திட்டத்தின் 10 மில்லியனில் வேலைத்திட்டம் கீழ் 3 ஆயிரத்து 10 மில்லியன் ரூபாவில் 3 திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வட மாகாண  பிரதம செயலாளர் அ.பத்திநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் பிரதம செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
ஜெயிக்கா நிறுவன நிதிப் பங்களிப்பில் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கிராமிய கட்டுமான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 3 ஆயிரத்து 10 மில்லியன் ரூபாவில் 3 திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. இவ்வாறு முன்னெடுக்கப்படும் திட்டங்கள் 3 ஆண்டுகளில் நிறைவு செய்யப்பட வேண்டிய திட்டங்களாகும். அதில் கிராமிய வீதித் திருத்தத்திற்கு முன்னுருமை அளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு நீர் சேமிப்புத் திட்டம் மற்றும் குடிநீர் விநியோகம் என 3 திட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
3 திட்டங்களும் தேவையின் அடிப்படையில் 5 மாவட்டத்திற்கும் பிலிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வீதித் திருத்தத்துடன் நீர் சேகரிப்பின் கீழ் நீர் நிலைகள் அபிவிருத்தியும் , தூய குடிநீர் விநியோகத்திட்டத்தின் கீழ் குடிநீர் அற்ற பிரதேசம் இனம் காணப்பட்டு அக் கிராமத்திற்கான நீர் விநியோகத்திற்கான திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதேவேளை இம் மூன்று திட்டங்களிற்காகவும் மொத்தமாக 3 ஆயிரத்து 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 1883.11 மில்லியன் ரூபா வீதிப் புனரமைப்பிற்கும் , 695.39 மில்லியன் நீர்த் தேக்க திட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள அதேநேரம் 431.5 மில்லியன் தூய குடிநீர் விநியோகத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீதித்திட்ட நிதியின் கீழ் வடக்கின் 5 மாவட்டத்திலும் மொத்தமாக 279 கிலோ மீற்றர் நீளமான வீதி புனரமைக்கப்படவுள்ளது.  அதன் பிரகாரம் கூடிய பட்சமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 72 கிலோ மீற்றர் வீதி புனரமைக்கப்படவுள்ளது. அத்தோடு  யாழ்ப்பாணத்தில் 69 கிலோ மீற்றர் வீதியும் , கிளிநொச்சியில் 50 கிலோ மீற்றர் வீதியும் பினரமைக்கப்படவுள்ளது. அதேபோன்று மன்னாரில் 45 கிலோ மீற்றர் வீதியுடன் வவுனியாவில் 41 கிலோ மீற்றர் நீளமான வீதியுமாகவே மொத்தம் 279 கிலோ மீற்றர் இனம் கானப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் இந்த ஆண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. என்றார்.