பண்டாரகம காவற்துறை அதிகாரியொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரகம பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் தற்போதைய நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த காவற்துறை அதிகாரி ஹொரணை ஆரம்ப மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

