நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு – செப்டம்பர் 8இல் விசாரணை ஆரம்பம்

787 0

images-21-765x510தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, பிரதிவாதிகள் 3 பேர் இல்லாமலேயே, அந்த வழக்கை செப்டம்பர் 8ஆம் திகதி தொடக்கம் விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த தீர்மானத்தை மேற்கொண்டது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூன்று பிரதிவாதிகளுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் அண்மையில் குற்றப்பத்திரிகை கையளித்தது.எஞ்சிய மூவருக்கும் இன்று குற்றப்பத்திரிகை கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், அவர்களை இன்று நீதிமன்றில் முன்னிலை செய்ய முடியாமல் போனதன் காரணத்தினால், இவ்வாறு வழக்கை விசாரிக்க தீர்மானிக்கப்பட்டது.

2006ஆம் ஆண்டு நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது சாரதி ஆகியோர் துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.சம்வம் தொடர்பில் 4 குற்றச்சாட்டுகளின் கீழ் 7 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.எனினும் தற்போது அந்த வழக்கில் இருந்து ஒரு பிரதிவாதிக்கு பிணையில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.