பங்களாதேஸில் தாக்குதல் – 9 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி

427 0

AFP4649246_LancioGrandeபங்களாதேஸின் தலைநகர் டாக்கில் காவற்துறையினர் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட 9 பேரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள கட்டிடம் ஒன்றில் மறைந்திருந்த நிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒரு அடிப்படைவாதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் பங்களாதேஸில் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இன்று அதிகாலை இரண்டு மணி நேரமாக இடம்பெற்ற மோதலில் அவர்கள் கொல்லப்பட்டனர்.

மோதலின் போது அவர்கள் அல்லாஹு அக்பர் என்று கோசம் எழுப்பியதாகவும், கறுப்பு நிறத்திலான ஆடையை அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் டாக்கா ராஜதந்திர வளாகததில் நடத்தப்படட தாக்குதலில் 18 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.