தாம் மேற்கொண்ட கொலையை முகப்புத்தகத்தில் பதிவிட்டவரை தேடும் அமெரிக்க காவல்துறையினர்

283 0

தம்மால் மேற்கொள்ளப்படும் மனித கொலைகள் தொடர்பான காணொளிகளை முகப்புத்தக கணக்கின் ஊடாக வெளியிடும் ஒருவரை தேடும் பணியில் அமெரிக்காவின் க்ளவ்லேண்ட் (Cleveland ) காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த நபர் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறான காணெளிகளை வெளியிட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Steve Stephens  என்ற இவர் புதிதாக வெளியிட்டுள்ள காணொளியின் ஊடாக, தாம் மேலும் 13 பேரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபருடைய புகைப்படத்தை அமெரிக்க பாதுகாப்பு பிரிவினர் பல்வேறு ஊடகங்களில் ஊடாக வெளியிட்டுள்ளனர்.