வவுனியாவில் வீதியோரத்தில் இருந்து மோட்டர் சைக்கிள் மீட்பு

382 0

வவுனியா, யாழ் வீதியில்  வீதி ஓரத்தில் இருந்து மோட்டர் சைக்கிள் ஒன்று வவுனியா காவல்துறையினரால் நேற்று இரவு மீட்கப்பட்டப்பட்டது.

வவுனியா, யாழ்வீதி வீதி ஓரத்தில் நிலத்தில் சரிந்து விழுந்த நிலையில் மோட்டர் சைக்கிள் ஒன்றும், ஹெல்மட், ஒரு சோடி பாட்டா என்பனவும் 3 மணித்தியால்திற்கும் மேலாக அவ்விடத்தில் காணப்பட்டுள்ளது.

அப்பகுதியில் செய்தி சேகரிப்புக்காக சென்றிருந்த ஊடகவியலாளர்கள் இது தொடர்பில் வவுனியா காவல்துறையினக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரால் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், விபத்து ஏதாவது நடந்திருக்கலாம் என்னும் அடிப்படையில் வவுனியா வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் அப்பகுதியில் இருந்து விபத்துக்குள்ளாகி எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த மோட்டர் சைக்கிள், ஹெல்மட் என்பன வவுனியா காவல்துறையினரால் மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது.