நேபாளம், சீனா இடையே முதல் ராணுவ கூட்டுப் பயிற்சி

241 0
உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் நட்பு ரீதியாக மற்ற நாடுகளுடன், குறிப்பாக அண்டை நாடுகளின் கூட்டு போர் பயிற்சி செய்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில், நேபாளம், சீனா நாடுகளுக்கு இடையே முதல் கூட்டு ராணுவ பயிற்சி காத்மண்டு நகரில் தொடங்கியது. பயிற்சியில் கலந்து கொள்வதற்காக சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ படையினர் ஏற்கனவே தலைநகர் காண்மண்டு வந்து சேர்ந்திருந்தனர்.
சகர்மாதா நட்பு-2017 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டுப் பயிற்சி வருகின்ற ஏப்ரல் 25-ம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சகர்மாதா என்பது எவரெஸ்ட் சிகரத்தின் நேபாள பெயர். இது நேபாளம் மற்றும் சீனா இடையே உள்ள எவரெஸ்ட் சிகரத்திற்கு இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 10 நாட்கள் நடைபெறும் இந்த ராணுவ பயிற்சியானது, தீவிரவாத எதிர்ப்பு மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்படுவதாக நேபாள ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள ராணுவம் நீண்ட காலமாக இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வந்திருக்கிறது.
இந்நிலையில் முதல் முறையாக நேபாளம் மற்றும் சீனா இடையே ராணுவ பயிற்சி நடைபெறுகிறது. நேபாளம் மற்றும் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.