இலங்கை வருகிறார் ஜப்பானிய சிறப்பு தூதுவர்

232 0

இலங்கைக்கான ஜப்பானின் சிறப்பு துதூவர் கலாநிதி ஹிரடோ இசுமி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் இந்த விஜயம் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான சிறப்பு பிரதிநிதி ஒருவரை ஜப்பான் நியமித்துள்ளது. ஜப்பானுக்குப் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஜப்பானிய அமைச்சரவைச் செயலர் யொஷிஹிடே சுகா இந்த நியமனம் தொடர்பில் அறிவித்திருந்தார்.

ஜப்பானிய பிரதமருக்கான ஆலோசகர் கலாநிதி ஹிரடோ இசுமியை  இலங்கைக்கான சிறப்புப் பிரதிநிதியாக ஜப்பான் நியமித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் கப்பல் பாதை, மற்றும் இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு ஆகிய விவகாரங்கள் குறித்து  இரு நாடுகளுக்கு இடையில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் மாநாடு ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதே போன்று இலங்கையில் ஜப்பானின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்கள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் முக்கிய நகர்வுகளில் இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குதல் என்பன ஜப்பானிய சிறப்பு பிரதிநிதியின் பணிகளாக காணப்படுகின்றன.