வட கொரிய ஏவுகணை தோல்வி – தென்கொரியா அறிவிப்பு

238 0

வட கொரியாவினால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட வகையில் செயல்படாமல் தோல்வியில் நிறைவடைந்துள்ளது.

வடகொரிய கிழக்கு கரையோர பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ஏவப்பட்டு சில விநாடிகளில் வெடித்து சிதறியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தம் இடம்பெறுவதற்கு முதல் நாள், பாரிய இராணுவ அணிவகுப்பொன்று வட கொரியாவில் இடம்பெற்றதுடன், நீண்ட தூரும் பாயும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கையினையும் மீறி வட கொரியா ஐந்து அணு ஆயுத சோதனை, மற்றும் தொடராக பல ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தது.

இதேவேளை, அமெரிக்க பிரதி ஜனதிபதி மைக் பென்ஸ் தென் கொரியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது வட கொரியாவின் எதேச்சையான போக்கினை எந்த முறையில் கட்டுப்படுத்துவது என்பது குறித்து தென் கொரிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.