வடக்கு,கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவருகின்ற வேலையில்லாத பட்டதாரி களின் போராட்டத்திற்கு நாங்கள் வாக்குறுதி தருவதாக நாங்கள் வரவில்லை. தொடர் போராட்டங்களை நடாத்துங்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோ பெரேரா தெரிவித்தார்.வடமாகாண வேலையில்லாத பட்டதாரிகள் இன்று 48 ஆவது நாளாக யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.அந்த வகையில் இவர்களை சந்திப்பதற்கான ஸ்ரீ லங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோ பெரேரா தலைமையிலான 09 அடங்கிய குழுவினர்கள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடியுள்ளனர்.பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.நாங்கள் வாக்குறுதி தந்து விட்டு போகவரவில்லை ஆனால் ஐனாதிபதிக்கு கட்டாயம் அழுத்தம் கொடுப்போம் எனவும் தெரிவித்தார்

