பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இருபத்தி ஐந்தாவது நாளாக தொடர்கிறது

420 0
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை
எனவே இவளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம் இனியும் வாழ முடியாது தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் எனக் கோரி   ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று சனிக்கிழமை இருபத்தி ஐந்தாவது நாளாக தொடர்கிறது
அத்துடன் தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்