13ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் டிக்கோயாவிலிருந்து காசல்ரி பகுதியை நோக்கிச் சென்ற முச்சக்ரவண்டியும் சவுத்வனராஜா பகுதியிலிருந்து அட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிக வேகமே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்த பொலிஸார் விபத்துக்குள்ளான இரு முச்சக்கர வண்டிகளும் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

