ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு நிதி உதவி

206 0

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 4 கோடியே 20 லட்சம் யூரோ நிதி உதவியினை வழங்க முன்வந்துள்ளது.

விவசாய நடவடிக்கைகளை நவின முறைப்படுத்தலுக்காக 3 கோடி யூரோ செலவிடப்படும் அதேவேளை, மிகுதியான நிதி இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்கவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் ருங் லாய் மருகீக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.