நாமலுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு

298 0

images (66)இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக் குழு முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு ஆஜ­ரா­காது அதனை அவ­ம­தித்­தமை தொடர்பில் அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்றஉறுப்­பினர் நாமல் ராஜ­ப­க் ஷ­வுக்கு எதி­ராக உயர்நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட அவ­ம­திப்பு வழக்கை எதிர்­வரும் ஆகஸ்ட் மூன்றாம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்ள உயர் நீதி­மன்றம் நேற்று தீர்­மா­னித்­தது.

இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்குழு தாக்கல்செய்­துள்ள மேற்­படி மனு மீதான பூர்­வாங்க விசா­ர­ணைகள் நேற்று பிர­தம நீதி­ய­ர­சரர் கே.ஸ்ரீ பவன் தலை­மையில் நீதி­ய­ர­சர்­க­ளான பிரி­யசாத் டெப், புவ­னகே அலு­வி­ஹார ஆகிய மூவர் கொண்ட நீதி­ய­ர­சர்கள் குழு முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்த போதே ஆகஸ்ட் மூன்றாம் திகதி முதல் வழக்கை விசா­ரணை செய்ய தீர்­மா­னிக்­கப்ப்ட்­டது.இது தொடர்­பி­லான வழக்கு நேற்­றைய தினம் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்பட்­ட­போது, வழக்குத் தொடு­ந­ரான இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக் குழு சார்பில் அதன் பணிப்­பாளர் நாய­கம்­ டில்­ருக்ஷி டயஸ் விக்­ர­ம­சிங்க மன்றில் பிர­சன்­ன­மானார்.

சந்­தேக நப­ரான நாமல் ராஜ­பக்ஷ சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி காமினி மாரப்­ப­னவின் கீழ் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜயந்த வீர­சிங்க, சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான சம்பத் மெண்டிஸ், பிரே­மநாத் தொல­வத்த உள்­ளிட்டோர் மன்றில் ஆஜ­ரானர்.

கடந்த மே 26 ஆம் திக­திக்கு முன்னர் இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக் குழு முன்­னி­லையில் ஆஜ­ரா­காது நாமல் ராஜபக்ஷ எம்.பி. ஆணைக் குழுவை அவ­ம­தித்­துள்­ள­தாக இதன்­போது இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக் குழு­வினால் உயர் நீதி­மன்றில் குற்றம் சுமத்­தப்பட்­டது.

நாமல் அவ்­வாறு ஆஜ­ரா­காது இருப்­ப­தற்­கான எந்­த­வொரு ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க கார­ணி­களும் முன்­வைக்­கப்ப்­ட­வில்லை எனவும் அத்­துடன் விசா­ர­ணை­களின் பொருட்டு அவ­ரது சொத்து விப­ரங்­களை காட்டும் வித­மாக கோரப்ப்ட்ட சத்­திய கட­தா­சியைக் கூட அவர் ஆணைக் குழு­வுக்கு சமர்­ப்பிக்­க­வில்லை எனவும் நேற்று உயர் நீதி­மன்றில் ஆஜ­ரான இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக் குழுவின் பணிப்­பாளர் நாயகம் தில்­ருக்ஷி டயஸ் சுட்­டிக்­காட்­டினார்.

இந் நிலை­யி­லேயே நாமல் ராஜ­ப­க்ஷ­வுக்கு எதி­ராக அர­சி­ய­ல­மைப்பின் 105(3) ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு உயர் நீதி மன்றை இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக் குழுவின் தலைவர் டி.பி. விஜே­சூ­ரிய எழுத்து மூலம் கோரி­யுள்ளார்.

இந் நிலையில் இலஞ்ச ஊழல் சட்­டத்தின் பிர­காரம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க போதுமான ஆதாரங்கள் உள்ளதாகவும் அதன் கீழேயே ஆணைக் குழு நாமலுக்கு எதிராக விசாரணைகளை தொடங்கியுள்ளதாகவும் அறிவித்த உயர் நீதிமன்றம் இது குறித்த அடுத்த கட்ட விசாரணைகளை ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.