காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர் வீட்டில் 20 லட்சம் தங்கம்

247 0

அநுராதப்புரம் – இபலோகம பிரதேசத்தில் அண்மையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவரின் பெற்றோரின் வீட்டிலிருந்து 20 லட்சத்திற்கும் அதிகமான தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவரது தந்தையின் வீட்டிலிருந்தே இந்த தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதுதவிர, கூரிய ஆயுதங்கள் சில மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜந்த புஸ்பகுமார பியகம எனப்படும் மரஞ்சி அஜந்த, நொச்சியாகம பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.

அவர் அநுராதப்புர பிரதேசத்தில் இடம்பெற்ற திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்பு கொண்டவர் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.