மைத்திரி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை

220 0

2017ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதத்திற்குள் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

எனினும் கடந்த வாரம் வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை என தேர்தல் கண்கானிப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மீண்டும் வாக்கு அளித்திருந்ததாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் கண்கானிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் இந்த வருட நிறைவடைவதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் நிறைவடைவதற்கு முன்னர் சட்டமூலத்தில் உள்ள தொழில்நுட்பத்தின் குறைப்பாடுகளை சரிப்படுத்த வேண்டும் எனவும், அந்த நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்களை நிறுவுவதற்கான வர்த்தமானி புது வருடத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் பைஸர் முஸ்தப்பா வாக்குறுதியளித்திருந்தார் அதுவும் நிறைவேற்றப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.