பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை தயாரித்த 2716 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு!

234 0

பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை உற்பத்தி செய்த 2716 நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மேற்கொண்ட சுற்றி வளைப்புக்களின் போது இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் சுமார் 19730 உணவு உற்பத்தி நிறுவனங்களில் சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களினால் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட சோதனையிடப்பட்டுள்ளது.

இனிப்பு வகைகள், மா வகைகள் மற்றும் எண்ணெய் வகைகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களே அதிகளவில் இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.

மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அதிகளவில் சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுற்றி வளைப்பு சோதனைகளுக்காக 2000 பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.