கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம், இன்று 53 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம்,
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளிப்படுத்து போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இரவு பகலாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் எவ்வித தீர்வும் இன்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

