வடக்கில் உள்ள மலையக மக்கள் பிரதேசவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றமை தொடர்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சர் மனோகணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில், கிளிநொச்சியில் உள்ள மலையகத்தவர்கள் குறித்து அவதூறான கருத்துக்கள் வெளியாக்கப்பட்டமை தொடர்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் காலத்தில் மலையக மக்கள் அவர்களால் அரவணைக்கப்பட்டனர்.
ஆனால் தற்போது யுத்தம் நிறைவடைந்ததாக கூறப்படுகின்ற நிலையில், கட்சி அரசியலின் கீழ் மலையக மக்கள் பிரதேசவாதத்துள் அழுத்தப்படுகின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது.
விடுதலைப் போராட்டத்தில் மலையக மக்களின் பங்களிப்பும் இருக்கிறது.
அவர்களை அரவணைக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இருக்கிறது என்றும் மனோகணேசன் கூறியுள்ளார்.

