இலங்கையுடன் உடன்படிக்கைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் ஆலோசனை

506 0

pakistan-vs-srilanka-2nd-t20-match-410x25011இலங்கையுடன் புதிய வர்த்தக உடன்படிக்கை ஒன்றை செய்துகொள்ள பாக்கிஸ்தான் ஆலோசனை தெரிவித்துள்ளது.

அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இதனை தெரிவித்துள்ளார்.

கென்யா – நைரோபியில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மற்றும் அபிவிருத்தி மாநாட்டின் 14வது அமர்வில் பங்கேற்ற பாக்கிஸ்தானின் வர்த்தகத்துறை அமைச்சர் குராம் டஸ்ட்கில்கான் இந்த ஆலோசனையை தெரிவித்ததாக இலங்கையின் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் எனவும் பாக்கிஸ்தானிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, இலங்கையில் பாக்கிஸ்தான் மட்டுமே வர்த்தக கண்காட்சியினை நடத்திய ஒரே நாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பாக்கிஸ்தானிய அமைச்சரின் யோசனையை இலங்கை அரசாங்கத்திடம் தாம் தெரிவிக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.