குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் நிதியமைச்சர்

221 0

உத்தேச அந்நிய செலாவணி சட்டமூலம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை நிதியமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

உத்தேச அந்நிய செலாவணி சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என ஒன்றிணைந்த எதிர்கட்சி கூறிவருகின்றது.

அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் தற்போது அமுலில் உள்ள அந்நிய செலாவணி சட்டமூலம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவை பொய்யான குற்றச்சாட்டுகளாலும், கூட்டு எதிர்கட்சிகள் இவ்வாறான உண்மைக்கு புறம்பான செய்திகளை மக்களுக்கு கூறிவருவதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.