சுகாதார அமைச்சை ஜனாதிபதி உடன் பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவர் அதிகாரிகள் சங்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்ற இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட, சங்கத்தின் உதவி செயலாளர் ஹரித அலுத்கே இதனை குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் தற்போது பரவிவரும் இன்புலுவன்சா எச்.வன்.என்.வன் வைரஸின் பொருட்டு பயன்படுத்தும் ‘டெம்புல்’ மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
அதனை தெரியப்படுத்தினால், தாங்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முனைகின்றோம் என சுகாதார அமைச்சர் கூறுகிறார்.
நாட்டில் இன்று சுகாதார நிலமைகள் சீர்கொட்டுள்ளன.
இதனை கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சை ஜனாதிபதி உடன் பொறுப்பேற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

