மலாலா யூசுப்பிற்கு கனடா கௌரவ குடியுரிமையை வழங்கியுள்ளது.

303 0

நொபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலா யூசுப்பிற்கு கனடா கௌரவ குடியுரிமையை வழங்கியுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுவர் கல்வி தொடர்பில் பாடுபடும் மலாலா மீது, தாலிபான்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

அதில் படுகாயமடைந்த மலாலா இங்கிலாந்தில் தங்கி சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில், அவருக்கு நெபல் பரிசு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கனடா தற்போது அவருக்கு கௌரவ குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளது.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலோ, மியன்மாரின் ஆங்சான் சூகி போன்ற சில உலக தலைவர்களுக்கு மாத்திரமே இந்த கௌரவத்தை கனடா அளித்துள்ளது.

மலாலா ஐக்கிய நாடுகளின் இளம் சமாதான தூதுவராகவும் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.