கூட்டு எதிர்கட்சியின் இனவாத யாத்திரை – மனோ

409 0

mano-ganesan_01கூட்டு எதிரணியின் உத்தேச பாதயாத்திரை ஒரு இனவாத யாத்திரையாகவே கருதப்படுவதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலோட்டமாக அவர்களது கோஷங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றின் உண்மை  அர்த்தங்கள் வேறானவை.

இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம், பிரிவினைவாதம், பயங்கரவாதம் ஆகியவையே அவர்களது உண்மை கோஷங்கள் என்று பதுளை ஹாலி-எலவில், ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவினால் நேற்று நடத்தப்பட்ட ‘சகோதரத்துவ விளையாட்டு விழாவில்’ பங்கேற்ற மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இனவாத பாதயாத்திரை சிங்கள சகோதரர்களுக்கு ஒரு  அரிய சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.

இனங்கள் மத்தியில் சகவாழ்வை உறுதிப்படுத்தி நாட்டை கடந்தகால பேரழிவில் இருந்து மீட்டு முன்னேறுவோமா?

அல்லது மீண்டும் கடந்த கால இனவாத பேரழிவுக்குள் வீழ்ந்து நாட்டை அதளப்பாதாளத்துக்குள் தள்ளுவோமா? என்பதை சிங்கள மக்களே முடிவு செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.