பாடசாலை மாணவர்களின் துஸ்பிரயோக சம்பவங்களை மறைக்கும் அதிபர், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை -மா.இளஞ்செழியன் எச்சரிக்கை-

376 0

3830384911பாடசாலைகளில் மாணவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சம்பவங்களை உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தி விசாரணைகளுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டியது கல்விப்பணிப்பாளர், அதிபர், ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுடைய கடமையாகும்.
இக் கடமைகளில் இருந்து மீறுபவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்க உட்படுத்த நேரிடும் என்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியர் எச்சரிக்கை செய்துள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாடசாலைகளின் பழையமாணவர் மற்றும் அபிவிருத்தி சங்கங்களில் அனாவசிய தலையீடுகளும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றும் நீதிபதி கூட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் உள்ள பாடசாலை அதிபர்களுக்கு மாணவர்கள் மத்தியில் இருந்து எழும் பிரச்சினைகளை எவ்வாறு சட்ட ரீதியில் கையாள்வது என்பது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியல் கலந்து கொண்டு அதிபர்களுக்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக வழக்கமளித்திருந்த போதே அவர் மேற்படி எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- பாடசாலை என்பது மிகுந்த பாதுகாப்பு கூடிய இடம் என்பதால்தான் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அதிபர்கள், ஆசிரியர்களை நம்பி விட்டுச் செல்லுகின்றார்கள்.
ஒரு பாடசாலை ஒன்றில் மாணவனோ, அல்லது மாணவியோ பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நடைபெற்றிருந்தால் அது தொடர்பாக அதிபர் நிர்வாக ரீதியில் கல்விப்பணிப்பாளருக்கு தகவல் வழங்க வேண்டியது அவசியம்.
ஆனால் அதன் பின்னர் பொலிஸாருக்கும், பாதிக்கப்பட்டவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்து விட்டு, பாதிக்கப்பட்டவரையும், அவருடைய பெற்றோரையும் அழைத்து பொலிஸ் நிலையத்திற்க சென்று முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்த பின்னர் நடந்தவற்றினை பற்றி பொலிஸாருக்க தெரிவித்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இது ஒரு சாதாரணமான விடயம். ஆனால் இந் நடமுறைகளைகளை பின்பற்றாமல் இருக்கும் அதிபர்கள் குற்றமிளைத்தவர்களாக கருதப்படுவார்கள். 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டள்ள சாட்சியங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் இது பாரிய குற்றமாக கருதப்படும்.
குறிப்பாக குற்றம் தொடர்பான தகவல்களை அறிந்தும் அதனை உரிய தரப்பில் தெரிவிக்காமல் மூடி மறைத்தமை பாரிய குற்றமாக கருதப்படும். குறிப்பாக இக் குற்றத்திற்க மேல் நீதிமன்றத்தினால் மட்டுமே பிணை வழங்க முடியும்.
மேலும் பாடசாலைகளில் உள்ள பழைய மாணவர் சங்கம், அபிவிருத்தி சங்கம் போன்றவற்றுடன் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக கலந்துரையாட வேண்டாம். அவர்கள் இவ்விடயங்களில் அனவசியமாக தலையிடவும் கூடாது.
அதிகரித்த தண்டணை வழங்குவதன் ஊடாகவே திருத்த முடியும். இவ்வாறு தண்டணை வழங்கப்படும் பட்சத்திலேயே குற்றவாளிக்கு தண்டனை தொர்பாக எப்போதும் ஞாபகம் இருக்கும் என்றார்.