இன்புலுவன்சா வைரஸின் பொருட்டு பயன்படுத்தும் மருந்துக்கு தட்டுப்பாடு

304 0

நாடு முழுவதும் தற்போது பரவிவரும் இன்புலுவன்சா எச்.வன்.என்.வன் வைரஸின் பொருட்டு பயன்படுத்தும் ‘டெம்புல்’ மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவர் சங்க அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட, சங்கத்தின் உதவி செயலாளர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்தார்.

தமது சங்கத்தின் மீது, சுகாதார அமைச்சர் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றார்.

எனினும் அதில் உண்மையில்லை.

இந்த நிலையில், சுகாதார அமைச்சை ஜனாதிபதி உடன் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தமது சங்கம் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.