லொத்தர் சபையின் முன்னாள் தலைவருக்கு பிணை

342 0

1652033898courtsதேசிய லொத்தர் சபையின் 23 மில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்ட்டிருந்த, லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சந்ரவங்ச பத்திராஜவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணை இன்று கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போதே அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
கடந்த 2010ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தனியார் நிறுவனங்கள் சிலவற்றிட்கு லாபம் ஏற்படும் வகையில், லொத்தர் சபையின் ஊடாக பிரசாம் மேற்கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
10 மில்லன் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதிக்கபட்ட அவருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்தது.