செல்வந்தர்களே நாட்டை ஆண்டனர் – அனுரகுமார

330 0

1425534708_8932739_24newslanka_anura-kumara-1கடந்த 64 நான்கு வருடங்களாக 10 சதவிகிதமாக வாழும் செல்வந்தர்களே, நாட்டை ஆட்சிசெய்துள்ளதாக ஜேவிபி யின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
சுதந்திரத்தின் பின்னர் உயர் குடியினரே இலங்கையை ஆண்டனர்.
அவர்கள் உயர்குடியினரின் நலனுக்காகவே செயற்பட்டனர்.
சாதாரண தமிழ் அல்லது சிங்கள மக்கள் இலங்கையை ஆளவில்லை.
இந்தநிலையில் 10 சதவீதமானவர்கள் ஏனைய 90 சதவிகிதமானவர்களை அடக்கி ஆண்டதாக அவர் குறிப்பிட்டார்.
உயர் குடியினர் நாட்டின் நலன் தொடர்பில் கவலை கொள்வதில்லை.
ஆட்சியில் இருந்து தோல்வியடைந்தவர்கள் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை.
இனவாதத்தை கொண்டு ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர்.
எனவே நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த அனைவரும் ஒன்றினைய வேண்டும்.
நாட்டில் நல்லிணக்கம் இன்றி, முன்நோக்கி செல்ல முடியாது என அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.