பண்டிகை காலத்தில் தட்டுப்பாடுகள் இன்றி கணிய எண்ணெய்யை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சந்திம வீரகொடி தெரித்துள்ளார்.எமது செய்தி பிரிவு, கணிய எண்ணெய் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் தற்போது விசேட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய மின் உற்பத்தி நிலையங்களுக்கும், போக்குவரத்து செயற்பாடுகளுக்கும், கணிய எண்ணெய்யை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சார் சந்திம வீரகொடி தெரித்துள்ளார்.

